இந்தியா, ஏப்ரல் 19 -- நடிகர் சூர்யா, நடிகை பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்து வரும் மே 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது, ரெட்ரோ திரைப்படம். இப்படத்தில் நடித்த அனுபவங்களை கலாட்டா யூடியூப் சேனலுக்கு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி பகிர்ந்து இருக்கிறார், நடிகை பூஜா ஹெக்டே. அந்தப் பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.

ரெட்ரோவில் நான் நடித்த கேரக்டர் ரொம்ப க்ளோஸ் டூ தி மை ஹார்ட். அவளுக்கு குறுகிய மனப்பான்மை தான் இருக்கும். அந்த கேரக்டருக்கு நல்லது எது என்றும், தீயது எது என்றும் தெரியும். ருக்மணி ரொம்ப வலிமையான கேரக்டர். அதேநேரம், ருக்குமணிக்கு நம்பிக்கையும் இருக்கும். ஒரு மென் தன்மையும் இருக்கும்.

பூஜாவும் ருக்குமணியும் லவ்வை லவ்வா பார்க்கிறாங்க. காதல் என்பது நம்பிக்கையில் இருந்து வந்தது. பூஜாவுக்கும் ருக்குமணிக்கும் கனவுகள் என்பது பொதுவாக இருந்தது. ருக்குமணிக்...