திருநெல்வேலி,பாளையங்கோட்டை, ஆகஸ்ட் 4 -- 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் திருநெல்வேலி தொகுதியில் கொட்டும் மழையில் நனைந்தபடி மக்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்து பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர் பிரதான சாலை மார்க்கெட் அருகே வந்து சேர்ந்தார். இங்கு எடப்பாடியாருக்கு புதுமையான வழியில் ட்ரோன் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "புயலாக உருவாச்சே என்ற இபிஎஸ் எழுச்சிப்பயணப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். எடப்பாடியார் புயலாக உருவாக இந்த ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளே காரணம். கொட்டும் மழையிலும் மக்கள் நின்று வாழ்த்துகிறார்கள். இன்றைய முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் இருக்கிறார், நாளைய முதல்வர் இ...