இந்தியா, ஏப்ரல் 16 -- குட் பேட் அக்லி படத்தின் நன்றி தெரிவித்தல் நிகழ்ச்சியான சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குட் பேட் அக்லி படக்குழு கலந்து கொண்டது.

இந்த நிகழ்ச்சியில் பிரியா வாரியர் பேசும் போது, 'என்ன சொல்வதென்றே தெரியவில்லை; நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தப் படம் தமிழில் எனக்கு இரண்டாவது திரைப்படம் தான். இதற்கே எனக்கு இந்த மாதிரியான ஒரு அன்பு கிடைத்திருக்கிறது.

ரசிகர்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். இந்த இடத்தில் நான் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி கூற விரும்புகிறேன் நித்யாவை எனக்கு கொடுத்ததற்கு மிகவும் நன்றி. படத்தில் நீங்கள் அஜித்தின் 64 படத்தை இயக்குவது போன்ற ஒரு குறியீட்டை வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் நான் மிகவும் ஓப்பனாக கேட்கிறேன் அந்தப்படத்திலும் என்னை நீங்கள் நடிக்க வைப்பதற்கு ...