இந்தியா, ஏப்ரல் 12 -- தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மானுக்கு பின் அதிக ரசிகர்களை கொண்ட இசையமைப்பாளராக இருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரது பாடல்கள் எல்லாம் எத்தனை முறை கேட்டாலும் புதிதாக கேட்பது போலவே ஒரு அனுபவத்தை தரும். அந்த அனுபவத்தை மக்களுக்கு நேரடியாக தரும் பொருட்டு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பல இடங்களில் லைவ் கான்செர்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க| 10 விஜய் படத்துக்கு மியூசிக் போடமாட்டேன்னு சொல்லிருக்கேன்- ஹாரிஸ் ஜெயராஜ்

அப்படி தான் தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் மில் திடலில் நாளை ஏப்ரல் 13 ஆம் தேதி ஹாரிஸ்- தி கிங் ஆஃப் ஹார்ட்ஸ் எனும் லைவ் கான்செர்ட்டை நடத்துகிறார். இதற்கான முன்னேற்பாடு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஹாரிஸ் ஜெயராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஆஸ்கார் விருது பற...