இந்தியா, மே 1 -- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் சூர்யா- கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தை காண கோயம்பேட்டில் உள்ள திரையரங்கிற்கு வந்தார். அப்போது அவரை சூழ்ந்த பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, தான் சோசியல் மீடியாவில் இருந்து ஓய்வெடுக்க காரணம் என்ன என்பதை கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் சோசியல் மீடியாவை விட்டு தள்ளி இருக்குறதுக்கு காரணமே சுத்தி சுத்தி ஏதாவது ஒரு விஷயம் வந்து தொந்தரவு பண்ணிட்டே இருக்கு. இது என்னோட பட வேலைய ரொம்ப பாதிக்குது. இடையில நடிகர் ஸ்ரீ பத்தின செய்தி எல்லாம் ரொம்ப வர ஆரம்பிச்சது. அதெல்லாம் என்ன ரொம்ப பாதிச்சது. அதுனால இன்னும் 3 மாசத்துல பட வேலை எல்லாம் முடியுற வரைக்கும் பிரேக் எடுக்கலாம்ன்னு இருக்கேன். அவர பாத்தேனா என்னங்குறது எல்லாம் இன்னொரு பேட்டியில சொல்றேன். இப்போதைக்கு...