மன்னார்குடி, ஜூலை 21 -- 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. இன்று மன்னார்குடி, திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை செய்கிறார்.

மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட மேலராஜ வீதியில் பெருமளவு குழுமியிருந்த மக்கள் கூட்டத்திடையே உரையாற்றிய இபிஎஸ்., ''மன்னார்குடி விவசாயம் நிறைந்த பகுதி. இந்த பூமியில் வாழ்பவர்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்கிறார்கள். ஆனால், விவசாய மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு விவசாய நிலங்களை எடுக்க ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார். அதிமுக அரசு அமைந்தபிறகு விவசாயிகளின் கோரிக்கை ஏற்று பாதுகாக்கபப்ட்ட வேளாண் மண்டலம் கொண்டுவந்து நிலங்களை அதிமுக பாதுகாத்த...