இந்தியா, மார்ச் 20 -- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லி கிழித்துவிட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளர்.

தமிழ்நாட்டில் நடந்த கொலை சம்பவம் குறித்து பேச அனுமதிக்காததாக கூறி சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் தமிழ்நாட்டில் நேற்று நடந்த கொலை சம்பவங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வர முயன்றோம். ஜீரோ ஹவரில் முக்கிய பிரச்னைகளை எழுப்புவது எதிர்க்கட்சியின் கடமை. கடந்த ஆட்சியில் திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தபோது, இதை பேசி உள்ளனர். அதையொட்டியே நேற்று நடந்த சம்பவங்கள் குறித்து சட்டப்பேரவையில் பேசினோம். பேரவைத் தலைவர் பேச...