புதுக்கோட்டை, ஜூலை 25 -- 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. இன்று புதுக்கோட்டை, விராலிமலை மற்றும் திருமயம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை நேரில் சந்திக்கிறார். அந்த வகையில் புதுக்கோட்டை, சத்தியமூர்த்தி சாலையில் குழுமியிருந்த திரளான மக்களிடம் உரையாற்றினார்.

இபிஎஸ் பேசுகையில், ''புதுக்கோட்டை அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் மக்கள் கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. 200 தொகுதிகள் வெல்வோம் என்று திமுக கனவு காண்கிறது, அது பகல் கனவாகவே முடிந்துவிடும். இந்த எழுச்சி பயணம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டையை மாநகராட்சியாக மாற்றி, பல கிராமங்களை இதில் இணைத்துள்ளனர், இதனால் வீட்டு வரி, குடிநீர் வரி எல்...