இந்தியா, ஜூலை 14 -- 'ஸ்டாலின் அரசு பகிரங்கமாக கனிம வளத்தைக் கொள்ளையடிக்கிறது'' என சேலத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

சேலம் நெடுஞ்சாலை நகர் அருகே உள்ள கிருஷ்ணா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேலம் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார். 2400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் 150 பேர் அமரக்கூடிய அரங்கும், மாநகர மாவட்ட கழக செயலாளர் தனி அறையும், தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கான அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிரொலி ஏற்படாமல் இருப்பதற்காக அரங்கு சுவர் முழுவதும் எதிரொலி தடுப்பு வழிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன் இந்த கட்டிடம் முழுவதும் குளிரூட்டி வசதி செய்யப்பட்டுள்ளது.

சேலம், கிருஷ்ணா நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ள அதிமுக மாநகர் மாவட்...