இந்தியா, ஜூலை 12 -- ஸ்டாலினின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் என கடலூரில் இபிஎஸ் அறிவித்து உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை கடலூரில் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" பரப்புரை பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், புதுச்சேரி பூரனாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுநல சங்கங்களை சேர்ந்தவர்களை பகலில் சந்தித்து அவர்களின் கோர்க்கைகளை கேட்டறிந்தார்.

அவர்களிடம் பேசிய இபிஎஸ், ''நான் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டு காலம் இக்கட்டானது வறட்சி புயல் கொரோனா உள்ளிட்ட மூன்று இக்கட்டான சூழ்நிலைகளும் சமாளித்து அரசுக்கு வரக்கூடிய வருவாய் வைத்து ஒரு சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம். நான் ஆட்சி செய்த போது பிரச்னைகளை சந்தித...