இந்தியா, ஜூன் 11 -- தென்னிந்திய சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட பல பிரபல பாடல்களை பாடி புகழ் பெற்றவர் பாடகி சின்மயி. இவர் மணிரத்னம்- கமல் ஹாசன் கூட்டணியில் உருவான தக் லைஃப் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் முத்த மழை எனும் பாடலை தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் பாடினார்.
முன்னதாக, சென்னையில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பாடகி தீ பங்கேற்க முடியாத சூழலால், தமிழில் தீ பாடிய முத்த மழை பாடலை சின்மயி பாட நேரிட்டது. இந்த பாடலை அவர் பாடிய விதம் அனைவரையும் மெய்மறக்க செய்யும் விதமாக அமைந்ததால், அவரது குரல் சில நாட்களாக தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தது.
இந்த சமயத்தில் தான் பாடகி சின்மயி, தமிழ் சினிமாவில் பாட தடை விதிக்கப்பட்டிருந்ததும் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்தும் மீண்டும் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தன. இதை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.