இந்தியா, ஏப்ரல் 22 -- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் நடக்கும் நிலையில், வெளிநாட்டினர் ஒருவருக்கு எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு டாஸ்மாக் கடையில் மது விற்பனை செய்யும் வீடியோவை பகிர்ந்து அதிமுக ஐ.டி.விங் நிர்வாகி கோவை சத்யன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், இன்று அணில் பாலாஜி துறை பற்றிய விவாதம்.டாஸ்மாக் ஊழல் பற்றி பேச எடப்பாடியாருக்கு அனுமதி இல்லை. இந்தியாவை சுற்றி பார்க்க வந்த வெள்ளைக்காரன் சென்னை டாஸ்மாக்கில் பீர் வாங்க சென்று MRP இல்லையா என்று கேட்க. இல்லை MRP மேல் ரூ 20 விலை சொன்ன ஊழியர் என பதிவிட்டு உள்ளார்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....