இந்தியா, மார்ச் 1 -- யாரென்றே தெரியாது என சொல்லும் சீமான் ஏன் எனக்கு 50 ஆயிரம் கொடுத்தார் என நடிகை விஜயலட்சுமி கேள்வி எழுப்பி உள்ளார்.

கட்டாய கருக்கலைப்பு செய்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக நேற்றிரவு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த விசாரணை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், காவல்துறைக்கு அரசுத் தரப்பில் இருந்து இந்த வழக்கில் அழுத்தம் தரப்படுகிறது. என்னை நேசிக்கும் சின்ன பிள்ளைகளுக்கு மன வலி உள்ளது. என்னை ஐயா கருணாநிதி அவர்கள் பலமுறை சிறையில்போட்டு என்னை தலைவன் ஆக்கினார். அப்பாவும், மகனும் என்னை முதல்வர் ஆக்கிவிட்டுதான் செல்வார்கள்.

இந்த வழக்கை திமுக அரசியல் ரீதியாக கொண்டு ...