இந்தியா, ஏப்ரல் 9 -- பாலியல் புகார் அளித்த பெண்ணை அரியலூர் எஸ்.எஸ்.ஐ சுமதி அவமதிப்பு செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், அதனை நேரடியாக எடுத்து விசாரித்த திருச்சி சரக டி.ஐ.ஜி.வருண் குமார், அவரை கடுமையாக எச்சரித்தார். மேலும் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றினார்.

அரியலூர் மாவட்டத்தில் மகளிர் காவல் நிலையத்தில் சுமதி என்ற உதவி ஆய்வாளர் புகார் அளிக்க வந்த பெண்ணை அவமதித்து பேசிய அந்த ஆடியோவை, சரக டி.ஐ.ஜி வருண் குமார் வெளியிட்டு, அந்த காவல் நிலைய காவலர்களையே வாக்கி டாக்கியில் சென்று நேரடியாக கண்டித்தார். அதன்பின், உதவி ஆய்வாளர் சுமதியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஐ.ஜி வருண் குமார் உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், அவருடைய அலுவலகத்தில், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, வரக்கூடிய நபர்களிடம் கனிவாகப் பேசிப் புகார் பெறும் வக...