இந்தியா, பிப்ரவரி 23 -- வீணாய் போன எடப்பாடி பழனிசாமி குறித்து கேள்வி கேட்க வேண்டாம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு இரு மொழிக் கொள்கையை அமல்படுத்தினார். தாய் மொழியான தமிழும், இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புதியக் கல்விக் கொள்கை மூலம் மூன்றாவது மொழியை படிக்க வேண்டும் என மத்திய அரசு சட்டம் நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாடு அரசு வேண்டாம் என்றால் இருமொழிக் கொள்கையே போதும் என்று சொல்லி அரசியல் ஆக்காமல் இருக்க வேண்டும். எனக்கு தெரிந்து பெரும்பாலான தமிழக மக்கள் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாகவே உள்ளார்கள். பெரும்பாலான அரசியல் இயக்களும் ஆதரவாகவே இருக்கிறோம். ஆனால் அதைவிட்டுவிட்டு எனக்கு 10 ஆயிரம் கோடி வேண்டாம் என்று...