இந்தியா, மார்ச் 19 -- வீட்டிற்கே ரேஷன் பொருட்களை கொண்டு சென்று வழங்கும் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தெரிவித்து உள்ளார்.

கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்.எல்.ஏ கே.ஏ.செங்கோட்டையன் கர்நாடாக மாநிலத்தில் உள்ள பெரிய மளிகை கடைகளில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டு. பொருட்கள் விநியோகம் நடைபெறுகிறது. அதை போல் இந்த அரசு செய்ய முன் வருமா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, ஆந்திராவில் வீட்டுக்கே சென்று பொருட்களை வழங்கும் திட்டம் செயல்முறையில் உள்ளது. வரும் 20ஆம் தேதி துறை அதிகாரிகள் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று நியாயவிலைக்கடைகள் மற்றும் பொதுவிநியோக திட்டம் குறித்து ஆராய்வதற்காக செல்ல உள்ளனர். அவர்கள் அறிக்கை ...