கரூர், செப்டம்பர் 28 -- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கரூரில் மரணமடைந்த தவெக தொண்டர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் அளித்தார். இதையடுத்து செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அரசின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்த கேள்விக்கு, ''இந்த அரசும், காவல்துறையும் இதில் முழு கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மெரினாவில் ஏர் ஷோ நடந்தது அதில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் சுமார் 5 பேர் இறந்தார்கள், அங்கே அப்படி ஒரு சம்பவம் நடந்தபோது ஒரு அரசியல் கட்சி தலைவர் கூட்டம் நடத்தும்போது, அவர் ஏற்கெனவே 4 மாவட்டங்களில் கூட்டம் நடத்தியபோது, என்ன பிரச்சினை நடந்தது என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பு வழங்கி இருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்.

நாங்களும் பொன்விழா கண்ட கட்சி, பல ஆண...