இந்தியா, ஜூன் 16 -- விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்து எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. அத்தோடு அவர்கள் இருவரும் கொடுக்கும் நேர்காணல்களில் ஒருவரையொருவர் பற்றிய தகவல்களும் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க| 'எங்க அப்பா பட்ட கஷ்டம் தான் நான் இங்க நிக்க காரணம்..' குபேரா நிகழ்ச்சியில் நெகிழ்ந்த தனுஷ்

இந்த சமயத்தில், குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனாவின் கருத்துக்கள் விஜய் தேவரகொண்டாவுடனான டேட்டிங் வதந்திகளுக்கு மீண்டும் வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டாவின் பெயரைக் கேட்டதும் ராஷ்மிகா வெட்கப்பட்டார். அத்தோடு குழைந்து சிரித்தார். இதைப் பார்த்த ரசிகர் குஷியில் க...