இந்தியா, மார்ச் 9 -- விஜயின் தவெக கட்சி தேர்தலில் போட்டியிட தேவையான அரசியல் உட்கட்டமைப்பை வலுப்படுத்தினார்கள் என்றால் 2026 தேர்தலில் வெற்றி பெற முடியும் என ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் தேர்தல் வியூக வகுப்பளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தனியார் டிவி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மீது வெறுப்பில் உள்ள பெரும்பகுதி மக்களிடம் இருந்து தவெகவுக்கு ஆதரவு கிடைக்கும். கடந்த 40 ஆண்டுகளாக இந்த 2 கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்துக் கொண்டு இருக்கும் நிலையில், மாற்று அரசியலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பீகாரில் ஜன்சுராஜும், தமிழ்நாட்டில் தவெகவும் கணக்கிடக் கூடிய முக்கிய அரசியல் சக்தியாக இருக்கும். மக்கள் புதிய விருப்பத்தை தேடுகிறார்கள் என தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு மா...