இந்தியா, மார்ச் 7 -- ஒரு சமூகத்திற்கு ஒரு புதிய தலைவன் ஒருவர் உருவாகிறான் என்றால், அது சினிமா நடிகராக இருக்கக் கூடாது என நடிகர் ஜோ மல்லூரி பேசிய கருத்து வைரலானது. இதன்மூலம் நடிகர் ஜோ மல்லூரி, நடிகர் விஜய்யை தான் தாக்கிப் பேசினார் என சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் நடிகர் மற்றும் கவிஞர் ஜோ மல்லூரி வாவ் தமிழா யூட்யூப் சேனலில் மார்ச் 3ஆம் தேதி இது குறித்த விளக்கத்தில், 'இது நான் இன்றைக்கு நேற்றைக்குப் பேசிய பேச்சு அல்ல. விஜய் வருவதற்கு முன்பு விஜயகாந்த் காலத்தில் இருந்து, தொடர்ந்து மேடையில் பேசி வரும் கருத்து. ஏதோ ஒரு ஊடகம் இதனை விஜய்யோடு ஒப்பிட்டு தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள போட்ட செய்தி.

முதலில் எனது கருத்தில் நான் பின்வாங்க மாட்டேன். இந்தக் கருத்து என்பது சமூக பொதுமைக்கான இளைஞர்களுக்கான கருத்து. ரொம்ப காலமாகவே, சினிமாவில் உங்களின் தலைவர...