Madurai,chennai, பிப்ரவரி 22 -- நடிகர் பாண்டியனின் மகன் பேட்டி: விஜயகாந்த் தனக்கு பெரியப்பா என்றும் எல்லோரும் உதவமாட்டார்கள் என்றும் நடிகர் பாண்டியனின் மகன் ரகு பேட்டியளித்துள்ளார்.

மண்வாசனை, ஆண் பாவம், கிழக்குச்சீமையிலே ஆகியப் படங்களில் நடித்து பெரியளவில் அதிர்வான ஹீரோவாக வலம் வந்தவர், நடிகர் பாண்டியன். 2008ஆம் ஆண்டு உயிரிழந்த அவருக்கு ரகு என்ற மகன் இருக்கிறார்.

இந்நிலையில் ரகு பாண்டியன் பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியவற்றின் தொகுப்பினைக் காணலாம்.

அப்பா கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாடியே சினிமாவுக்கு வந்திட்டார். பாட்டியோட தம்பி அப்பா. மாமா பொண்ணை தான் கல்யாணம் பண்ணி வைச்சாங்க. அப்பா பாண்டியனுக்கு இந்தக் கல்யாணத்தில் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை. விருப்பமே இல்லாமல் தான், அம்மாவை அப்பா கல்யாணம் பண்ணுனாங்க. எங்க சொந்தக...