இந்தியா, பிப்ரவரி 27 -- காவல்துறை விசாரணைக்கு என்னால் வர முடியாது, என்ன செய்ய முடியும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

கட்டாய கருக்கலைப்பு செய்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக இன்று நேரில் ஆஜராக சீமானுக்கு வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் நேரில் ஆஜராகாத சீமான் கட்சி நிகழ்ச்சிக்காக ஓசூர் சென்றுள்ளார். சீமான் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி காவல்துறையிடம் அவகாசம் கேட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் உள்ள சீமான் வீட்டில் காவல்துறையினர் சம்மன் ஒட்டினர். ஒட்டப்பட்ட சம்மனை சீமான் வீட்டில் பணியாளர் சுதாகர் என்பவர் கிழித்தார். இது தொடர்பாக கா...