இந்தியா, செப்டம்பர் 1 -- ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் (Cologne) நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு என்கிற ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரை இதோஊ

''அப்படியே உங்கள் முகத்தை எல்லாம் தொடர்ந்து அமைதியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. இப்படி தான் ஒரு முறை எங்களை எல்லாம் ஆளாக்கிய நம்முடைய ஒப்பற்றத் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசுகின்றபோது சொன்னார். அதிலும் குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்றபோது இதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். இரண்டு நிமிடம் பேசாமல் இருந்திருக்கிறார். எல்லோருக்கும் கொஞ்சம் வியப்பாக இருந்திருக்கிறது. உடம்பு ஏதாவது சரியில்லையா? தொண்டை ஏதும் சரியில்லாமல் இருக்கிறதா? அதற்குப் பிறகு பேச ...