இந்தியா, ஜனவரி 6 -- ஒருத்தர் அழறாரு ஆனா அவர் கண்ணில் இருந்து தண்ணீர் வரவில்லை, ஏன்?

ஏன்னா, அவங்க ஊர்ல தண்ணீர் கஷ்டமாம். ஹாஹாஹா!

யார் அடிச்சா வலிக்காது?

வேற யாரு காத்தடிச்சாதாங்க வலிக்காது. ஹாஹாஹா!

தண்ணீரில் கரைத்தால் கரையும் திரை எது?

வேற எது மாத்திரை தாங்க, ஹாஹாஹா!

தண்ணீரில் கரைத்தால் கரையாத திரை எது? நித்திரை தாங்க, என்ன செம்ம மொக்கையா? ஹாஹாஹா!

தாஜ்மஹால்க்கு பெயின்ட் அடிச்சா என்ன ஆகும் தெரியுமா?

பெயின்ட்தான் காலியாகும். ஹாஹாஹா!

போஸ்ட் மேன் கீழ விழுந்தா எப்படி விழுவாரு?

தபால்ன்னு விழுவாரு. ஹாஹாஹா!

ஒருத்தன் மாத்திரைக்கு ஏன் பால் ஊத்துறான்?

ஏன்னா, அது பாம்பு மாத்திரையாம். ஹாஹாஹா!

ஒருத்தர் மாடியில் இருந்து குக்கரை கீழே போட்டாராம். அது கீழே விழவில்லையாம், ஏன்?

ஏன்னா, அது பட்டர்ஃப்ளை குக்கராம். ஹாஹாஹா!

ஒருத்தர் ஓட்டலுக்குப்போய்...