இந்தியா, ஏப்ரல் 19 -- சென்னையில் நேற்று கார்த்திக் சுப்புராஜ்- சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க| 'மகனே டாடி கம்மிங்'.. தெறிக்க தெறிக்க வெளியானது சூர்யாவின் ரெட்ரோ பட ட்ரெயிலர்.. தரமான சம்பவம் வெயிட்டிங்!

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூர்யா, தன் ரசிகர்களுக்கு வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். அப்போது, "இங்க இருக்க தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் நான் சொல்லிக்கிறது ஒன்னு தான். எங்க அப்பா சொன்னத தான் நானும் சொல்றேன். நான் 10 ஆவது படிக்கும் போது எல்லா சப்ஜெக்ட்லயும் ஃபெயில் ஆகிட்டு இருந்தேன். ஒரே முறை தான் பாஸ் ஆனேன். அதுதான் பப்ளிக். 12 ஆவத படிக்கும் போதும் அது தான். அதுக்கு அப்புறம் வாழ்க்கை ரொம்ப அழகா ...