இந்தியா, மார்ச் 28 -- சூப்பர் ஹீரோ கதையாகப் பார்க்கப்படும், 'க்ரிஷ்' படத்தின் நான்காவது பாகத்தினை நடிகர் ஹிருத்திக் ரோஷன் இயக்கவுள்ளார் என அதிகாரப் பூர்வமாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 'க்ரிஷ்' படத்தின் முந்தைய மூன்று பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த ஹிருத்திக் ரோஷன் தான், இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஹிருத்திக்கின் தந்தையும் திரைப்படத் தயாரிப்பாளருமான ராகேஷ் ரோஷன், இந்தச் செய்தியை சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக ராகேஷ் ரோஷன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது,"25 ஆண்டுகளுக்கு முன்பு நான் உங்களை ஒரு நடிகராக அறிமுகப்படுத்தினேன். இன்று மீண்டும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதித்யா சோப்ரா மற்றும் நான் ஆகிய இரண்டு திரைப்பட தயாரிப்பாளர்களால், க்ரிஷ் 4 திரைப்படத்தில் (Krrish4), எங்களது லட்சியப் படத்தை முன்...