Coimbatore,Chennai, ஜனவரி 28 -- சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவும், அதிமுக முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி., ராஜாவின் பதிலை கண்டித்தும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு புள்ளி விபரமாக பதில் தர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதோ, அவருடைய அறிக்கை:

''தமிழ் நாட்டின் GSDP, கடந்த பல ஆண்டுகளாக தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில்தான் உள்ளது. 1960-ஆம் ஆண்டு முதலே தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ் நாட்டின் பங்களிப்பு சில ஆண்டுகள் தவிர, மற்ற ஆண்டுகளில் 8 முதல் 9 சதவீதமாகத்தான் இருந்து வருகிறது. ஆனால் தொழில் துறை மந்திரி 26.1.2025 அன்று வெளியிட்ட அறிக்கையில், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ் நாட்டை இரண்டாம் இடத்திற்கு விடியா தி...