பனையூர்,சென்னை, ஏப்ரல் 4 -- பாஜக அரசின் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பல இடங்களில் அனுமதியை மீறி போராட்டம் நடத்தியதால், தவெகவினரை போலீசார் கைது செய்தனர். தவெகவின் அனைத்து அணிகளின் சார்பிலும் நிர்வாகிகளும், தொண்டர்கள் பலரும் இதில் பங்கேற்றனர். பனையூரில் நடந்த ஆர்பாட்டத்திற்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்தார். அதே போல, மாவட்ட வாரியாக கண்டன ஆர்பாட்டம் நடந்தது. சில இடங்களில் எஸ்டிபிஐ மற்றும் பிற இஸ்லாமிய கட்சிகள் மற்றும் அமைப்பின் நிர்வாகிகளும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். பிற இடங்களில் நடந்த ஆர்பாட்டத்தில் சில காட்சிகள் இதோ:

ஒன்றிய பா.ஜ.க அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃபு சட்டத் திருத்த மசோதா, மதச்சார்பற...