இந்தியா, மார்ச் 28 -- சீயான் விக்ரமின் அதிரடி நடிப்பில் மார்ச் 27ஆம் தேதி மாலை வெளியான திரைப்படம், வீர தீர சூரன். முதல் நாளில் நல்ல வசூலுடன் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பினைக் குவித்துள்ளது.

எஸ்.யு. அருண் குமார் இயக்கிய இந்த திரைப்படம், அதன் ஆரம்ப வெளியீட்டு தேதி குறிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

வீர தீர சூரன் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் மற்றும் சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். 'வீர தீர சூரன் பாகம் 2' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் மதுரையைச் சேர்ந்த குடும்பஸ்தரான காளி என்ற மளிகைக் கடை நடத்தும் நபரை மையமாகக் கொண்டது. காளி ஒரு ஆபத்தான குற்றப்பின்னணியில் ஈடுபட்டவுடன் கதை மாறுகிறது. மேலும், காளி யார் என்பதைப் படம் விவரிக்கிறது.

வீர ...