இந்தியா, மார்ச் 6 -- ஜி.வி.பிரகாஷ் பற்றி திவ்ய பாரதி பேட்டி: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தற்போது நடிகராக அவரது 25ஆவது படமான 'கிங்ஸ்டன்' எனும் படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் முதல் இந்திய கடலில் நடக்கும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாகும். இப்படம் நாளை வெளியாகிறது.

இந்த கிங்ஸ்டன் திரைப்படம் குறித்து அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் பகிர்ந்து கொண்டது, "படத்தில் 3000 விஎஃப்எக்ஸ் காட்சிகள் உள்ளன. தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல் செட் படம் இது.

கிராஃபிக்ஸ் சிக்கல்களை தவிர்...