இந்தியா, ஏப்ரல் 4 -- துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் ருக்கு கேரக்டர் ரொம்பப் பிடிக்கும் என்றும், விஜய் கூட கெமிஸ்ட்ரி ஆடியன்ஸ்க்கு பிடித்துவிட்டது எனவும் நடிகை சிம்ரன் த்ரோபேக் பேட்டியளித்துள்ளார்.

நடிகை சிம்ரன் ஜெயா டிவிக்கு கொடுத்த நேர்காணல், கடந்த 2024ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ஆம் தேதி, ஜெயா டிவியின் யூடியூப் பக்கத்தில் வெளியானது. அதில் கேட்கப்பட்ட சுவாரஸ்யமான கேள்விகளின் தொகுப்பினைக் காணலாம்.

ஆக்சுவலி நான் ஒன்னுமே பண்ணல. எப்பயுமே சொல்லிட்டே இருப்பேன் அதுதான். உடற்பயிற்சி பண்ணுவேன். யோகா பண்ணுவேன். நேரத்துக்கு சாப்பிடுறேன். இது தான் எல்லாரிடத்திலும் சொல்லிட்டு இருக்கேன். இதுதான் என்னுடைய தினசரி லைஃப். இதை எப்போதுமே செய்திட்டு இருக்கேன். ஏதாவது ஒரு பிசிக்கல் ஆக்டிவிட்டி பண்ணினால், நமக்குத்தான் நாம் கிஃப்ட் கொடுக்கப்போறோம். We are go...