இந்தியா, ஏப்ரல் 21 -- சென்னையில் தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் துடிதுடித்துக் கொண்டிருந்ததை பார்த்த உடன், மின்னல் வேகத்தில் செயல்பட்டு சிறுவனை காப்பாற்றிய கண்ணன் என்பவருக்கு தங்க மோதிரம் அணிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் கடந்த 16 ஆம் தேதி தேங்கிய மழை நீரில் நடந்து சென்ற 9 வயது சிறுவன் மின்சார் பாய்ந்து அந்த இடத்திலேயே விழுந்து துடிதுடித்துக் கொண்டிருந்தான்.

அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த கண்ணன் என்பவர், சிறுவனை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இதையடுத்து, சிறுவனை காப்பாற்றிய இளைஞர் கண்ணனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வந்த நிலையில், அதிமுக ப...