இந்தியா, ஏப்ரல் 28 -- "ராமாயணத்திலேயே பெண்ணை தூக்கி சென்றார்கள் அதனால் நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள் நடவடிக்கை என்ன என்பதை தான் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது" என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து உள்ளார்.

மேலும் படிக்க:- தமிழ்நாட்டில் எம்-சாண்டு, பி-சாண்டு, ஜல்லி விலைகள் குறைப்பு! எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில் பெண்கள் பாதுகாப்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கும், அமைச்சர்களுக்கும் காரசார விவாதம் ஏற்பட்டது.

தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருவதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டிய நிலையில், இதற்கு அமைச்சர்கள் துரைமுருகன், கீதா ஜீவன், மற்றும் ரகுபதி ஆகியோர் பதிலளித்தன...