இந்தியா, மார்ச் 23 -- தெலுங்கில் நிதின், ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராபின்ஹூட்'. இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி வருகிறார். இதில் ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதன்மூலம் அதிகாரப்பூர்வமாக இந்திய சினிமா உலகில் அடி எடுத்து வைத்துள்ளார் வார்னர். இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் மற்றும் ரவிசங்கர் தயாரித்துள்ளனர்.

வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணியளவில் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில...