இந்தியா, மார்ச் 9 -- அதிமுக கூட்டணியில் மனவருத்தம் ஏதுமில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.

வரும் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் 4 ராஜ்யசபா எம்பி பதவிகள் காலியாக உள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், 134 எம்.எல்.ஏக்களை கொண்ட திமுகவுக்கு 4 இடங்களும், 66 எம்.எல்.ஏக்களை வைத்து உள்ள 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவது குறித்து அதிமுக உறுதி அளித்து உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ள நிலையில், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவது தொடர்பாக எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் அதிமுக - தேமுதிக கூட்டணிகளுக்கு இடையே கசப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் செய்தியாளர்க...