இந்தியா, மார்ச் 21 -- நடிகர் சாம் நடித்து அஸ்திரம் என்னும் திரைப்படம் மார்ச் 21ஆம் தேதியான இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. இப்படத்தில் நடிகர் சாமுடன் நிழல்கள் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் நிழல்கள் ரவி, அஸ்திரம் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும், தனது சினிமா பயணம் குறித்தும் ஆதன் சினிமா யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி, மார்ச் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகியிருக்கிறது. அதன் தொகுப்பினைக் காணலாம்.

அஸ்திரம் படத்தில் நான் மனநல மருத்துவர் கேரக்டரில் நடித்திருக்கிறார். நல்ல ஒரு வைப் கேரக்டர். இந்தப் படத்தை முக்கியமான புள்ளிகளில் இணைக்கும் கேரக்டர்.

நடிகர் சாமை ரொம்பப் பிடிக்கும். அவரது நிறையப் படங்கள் பார்த்திருக்கிறேன். ரொம்ப ஸ்டைலீஷ் ஆக்டர். எத்தனையோ ஜானரில் பார்த்திருக்கிறோம். வசனம் சொல்வது, அந்த டைமிங் எல்லாம...