இந்தியா, மே 24 -- வடிவேலுவுக்கும் கவுண்டமணிக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் குறித்து பிரபல இயக்குநர் வி சேகர் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'வடிவேலு ஒரு கஞ்சன். அவன் சம்பாதித்த பணத்தை அவன் செலவு செய்யவும் மாட்டான்; மற்றவர்களுக்கு கொடுக்கவும் மாட்டான். 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' படத்தில் கவுண்டமணி என்னிடம் 5 லட்சம் ரூபாய் தான் சம்பளமாக வாங்கினார். அந்தப்படத்திற்காக 30 நாட்கள் எனக்கு கால் சீட் கொடுத்தார்.

நான் முன்னதாக ஏவிஎம் நிறுவனத்தில் வேலை செய்திருந்தேன். அந்த நிறுவனம்தான் 'எஜமான்' படத்தை தயாரித்து இருந்தார்கள்; அந்தப்படத்தில் கவுண்டமணியை கமிட் செய்வதற்கு முன்னர்அவருக்கு சம்பளம் எவ்வளவு கொடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்வதற்காக என்னிடம் விசாரித்தார்கள். நான் ...