இந்தியா, ஏப்ரல் 17 -- நடிகை சுனைனா, தமிழில் குறிப்பிடும்படியான படத்தில் நடித்த நடிகையாவார். தவிர, நடிகை சுனைனா தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகை சுனைனா குறித்து பேச எண்ணற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.

யார் இந்த நடிகை சுனைனா?: நடிகை சுனைனா, ஹரிஷ் யெல்லா மற்றும் சந்தியா யெல்லா தம்பதியினருக்கு மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் 1989ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் தேதி பிறந்தவர். இவரது மற்றொரு பெயர் ஹேமாக்சி ஆகும். பிறப்பால் தெலுங்கு இவரது தாய்மொழியாகும். நாக்பூரில் நடிகை சுனைனா பிறந்தாலும், அவரது குடும்பம் பின்னர் ஹைதராபாத்துக்கு புலம் பெயர்ந்தது.

நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மாடலிங் மற்றும் சினிமாவுக்கான வாய்ப்புகளைப் பெறும் முயற்சியில் சிறுவயதில் இருந்தே ஈடுபட்டு வந்த சுனைனாவுக்கு குமார...