இந்தியா, ஏப்ரல் 7 -- தமிழக சட்டமன்றத்தில் இன்று (07.04.2025) அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் "அந்த தியாகி யார்?" என்ற கேள்வியுடன் கூடிய பேட்ஜ்களை அணிந்து வருகை தந்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று தொடங்கியது. வீட்டு வசதி மற்றும் நகர்புற துறை மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்து இருப்பதாக கூறி இருந்த நிலையில் "அந்த தியாகி யார்?" என்ற பேட்ஜ்களை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்குவதாகக் கூறி, ஆயிரம் கோடி ரூபாயை அமுக்கியது யார் என்பதையும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பவும் அத...