இந்தியா, மே 20 -- சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில், யார் அந்த தம்பி எனக் கேட்டு, பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 16 காலை முதல் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனின் மணப்பாக்க இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்துவிட்டு, அவரை மேலும் விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச்சென்றனர்.

இந்நிலையில் எம்.டி எனப்படும் மேலாண் இயக்குநர் வீட்டின் அருகே, கிழிந்த நிலையில் ஆவணங்கள் இருந்தன. அந்த ஆவணங்களில் டாஸ்மாக் நிறுவனத்தின் எம்.டி. விசாகனுக்கு, டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால் திமுகவிற்கு பாதிப்பு என ரத்தீஷ் என்பவர் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்த சாட் இருந்தது. இது திமுகவிற்கு சில நாட்களாக தலைவலியாக மாறி இருக்கிறது. மேலும் அ...