பஹால்காம்,ஜம்மு காஷ்மீர், ஏப்ரல் 22 -- கர்நாடகாவின் ஷிவமொக்காவைச் சேர்ந்த தம்பதியினர் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றது சோகத்தில் முடிந்தது. தொழிலதிபர் மஞ்சுநாத் ராவ் செவ்வாய்க்கிழமை அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். பயங்கரமான அந்த தருணத்தை நேரில் பார்த்த அவரது மனைவி பல்லவி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

மேலும் படிக்க | 'முஸ்லிம் இல்லை என்பதால் சுட்டுக் கொன்றார்களா?' பஹல்காம் தாக்குதலை விவரித்த இறந்தவரின் மனைவி!

பல்லவி, பஹல்காமில் உள்ள மருத்துவமனை படுக்கையில் இருந்து டெக்கான் ஹெரால்டு ஊடகத்திடம் பேசிய போது, தனது உலகத்தையே சிதைத்த அந்த தருணங்களை பகிர்ந்து கொண்டார். "நாங்கள் ஏப்ரல் 19 அன்று காஷ்மீருக்கு சுற்றுலா வந்தோம். இது மிகவும் அழகான இடம், நாங்கள் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வந்தோம்...