கிருஷ்ணகிரி,பர்கூர்,ஊத்தங்கரை, ஆகஸ்ட் 12 -- 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பேரணி மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாட் பழனிசாமி இன்று கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். இன்று மாலை கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட ஓல்டு சப் ஜெயில் சாலையில் ரோடு ஷோவில் மக்கள் மரியாதையை ஏற்றுக்கொண்ட எடப்பாடியார் ரவுண்டானா அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர், ''கிருஷ்ணகிரி அதிமுகவின் கோட்டை. அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இங்கு அதிமுகவே வெல்லும் என்பதற்கு இங்கிருக்கும் மக்கள் வெள்ளமே சாட்சி. மேற்கு மாவட்டம் திமுகவின் கோட்டை. எடப்பாடி எப்படி இங்கிருந்து பயணத்தை ஆரம்பித்தார் என்று ஸ்டாலின் உடுமலைப்பேட்டையில் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவருக்குத் தெரியவில்...