இந்தியா, மார்ச் 11 -- மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய, கிழக்கு, வடக்கு, தெற்கு மாவட்டங்களைச் சார்ந்த உறுப்பினர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இதுதொடர்பாகப் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த...