இந்தியா, ஏப்ரல் 29 -- முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகவும், இதனால் கேரள மக்களின் உயிறுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளது.

மேலும் படிக்க:- 'மங்குனி மந்திரிசபை நடத்திவிட்டு தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?' ஈபிஎஸ்க்கு ஆர்.எஸ்.பாரதி சரமாரி கேள்வி

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அணை பலவீனமாக இருப்பதாகவும், கேரள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது. இந்த பிரமாண பத்திரத்தில், புதிய அணை கட்டுவதே இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

கேரள அரசு தனது பிரமாண பத்திரத்தில், முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு, புனரம...