இந்தியா, மார்ச் 7 -- மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அமலாக்கத்துறை ரெய்டு மூலம் மத்திய அரசு திசை திருப்ப முயற்சி செய்வதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டத்திற்கு வந்தடைந்தேன். நேற்று, மகளிர் சுய உதவிக் குழுவினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினோம். அதே போல மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, தாட்கோ திட்டத்த...