மதுரை, செப்டம்பர் 3 -- இன்று மதுரை மேற்கு, மதுரை மத்திய தொகுதிகளில் மக்களை சந்தித்துவிட்டு அடுத்தபடியாக மதுரை தெற்கு தொகுதி, முனிச்சாலையில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சியுரை நிகழ்த்தினார்.

''மதுரையில் 3 நாள் சுற்றுப்பயணத்தின் இறுதி நாள் கூட்டம். இது, இறுதி அல்ல. இனி, அடுத்த ஆண்டு வெற்றி விழாவில் பேசுவேன். மதுரை முழுக்க அதிமுக வென்று பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும். மதுரை மாநகராட்சியில் 200 கோடி ஊழல் நடந்திருக்கிறது. ஆளுங்கட்சியே முறைகேடு நடந்ததாக கண்டுபிடித்து மேயரின் கணவரை கைது செய்துள்ளது. ஊழல் நடந்தது உறுதியாகிவிட்டது. இது எவ்வளவு பெரிய மெகா ஊழல்?

மக்கள் கஷ்டப்பட்டு வரி கட்டுகிறார்கள், ஆடு மாடு பன்றிக்கும் வரி போட்டுவிட்டனர். அப்படி வரி போட்டு கொள்ளை அடித்தது தான் சாத...