இந்தியா, ஜூலை 11 -- அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழாவில் அவரின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள இடுகையில், தாய் மண்ணின் உரிமைக்காக பிரிட்டிஷ் சர்வாதிகாரத்திற்கு எதிராக முதல் குரல் கொடுத்து, வெள்ளையர்களை வீறு கொண்டு எதிர்த்து,தாய்நாட்டின் மானத்திற்காக மரணத்தை முத்தமிடத் தயார் என முழங்கி தாய்மண்ணிற்காக இன்னுயிர் நீத்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழாவில் அவரின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் என கூறி உள்ளார்.

சென்னை எழும்பூரில் வைக்கப்பட்டு உள்ள மாவீரன் அழகுமுத்துக் கோன் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணி...