இந்தியா, ஜூன் 12 -- பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "எனக்கும் செயல்தலைவருக்குமான பிரச்னைகள் உங்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. பாமக பிரச்னையில் 2 சிறந்த ஆளுமைகள் 2 பேரின் சமரச பேச்சுவார்த்தை நடக்கிறது. பேச்சுவார்த்தை டிராவில் உள்ளது; முடிவுக்கு வரவில்லை. அதேபோல், இந்த விவகாரத்தில் என்னை தேடி வந்த 14 பஞ்சாயத்துக்காரர்களும் ஒரே விதமான தீர்ப்பையே கூறி இருக்கிறார்கள். பாமக தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லியும் அதனை அன்புமணி நம்பவில்லை. அய்யாவை நம்ப முடியாது. எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கள் என்றார். அதன்பின் எனக்குள் இருந்த கோபம் பொங்கி எழுந்தது. நீயா? நானா? பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்துவிட்டேன்." என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

மேல...