இந்தியா, ஏப்ரல் 20 -- மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவின் அரசியல் வாழ்கைக்கு உறுதுணையாக இருப்பேன் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்து உள்ளார்.

சென்னை, ஏப்ரல் 20, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தனது பதவி விலகல் முடிவை திரும்பப் பெற்று, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுடன் இணைந்து கட்சி நலனுக்காக பணியாற்ற உறுதியளித்தார். மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், தலைவர் வைகோவின் முயற்சியால் இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டு, ஒற்றுமை உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சமாதானம், கட்சியில் நிலவிய உட்கட்சி பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, "எல்லா ஜனநாயக இயக்கங்களிலும் கருத்து வேறுப...