இந்தியா, பிப்ரவரி 24 -- கிராம சாலைகள் அமைக்க ஒதுக்கீடு செய்த ரூ.2,300 கோடி நிதி எங்கே சென்றது என தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த நெல்லித்துறை பகுதியில், முறையான சாலை வசதி இல்லாததால், மாரடைப்பு ஏற்பட்டு இறந்த ஒருவரின் உடலை, டோலி கட்டி, தூக்கிச் செல்லும் காணொளி, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ள இந்தப் பகுதியில், ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடியினர் வசித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை இவர்களுக்கு முறையான சாலை வசதிகள் இல்லை என்பது, தமிழக அரசின் அவலநிலைக்குச் சான்று.

மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இர...